December 15, 2011

தத்துவங்கள் .....

சிக்கல் தீர்க்க
முன்வராத
கருத்துருக்கள்.
ஆளுக்கொன்றாய் உதிர்க்கும்
தத்துவங்கள்
அவரவர் திசையில்
இழுத்துச் செல்லும்.
என்திசை காணவே
என் பயணம்.
எனின் -
எனக்கான தத்துவம்
என்னுள் -
அக்னிக் குஞ்சாய்
காத்திருக்கும்.

December 05, 2011

பயணங்கள் …..

வாழ்க்கையின் போதங்கள்
பயணங்கள்.
பயணங்களினூடாய் ஆறுதல் நிழலாய் தத்துவங்கள்.
ஆயின்
அவை சாஸ்வதமற்றவை.
நிழலுதறி
நிதர்சனங்கள் ஊடாடும் பாதையில்
பயணித்தேயாக வேண்டும்
அறியா இடத்தில் புதைந்திருக்கும்
அறியா ஒன்றைத் தேடி.