படபடத்து
பறந்து வந்து
ஜன்னல் கம்பியில்
துடிதுடிக்கும்
பாலிதீன்
உயிர் அவஸ்தை
பையன்கள்
தூக்கிப் போட்ட
கூழாங்கற்களின் அதிர்வுகள்
பாம்புகளின் நடமாட்டம்
தவிர்த்து
ஆழ்ந்துறங்கும் பாழுங்கிணறு
வயி்றுகளின் பசியழிக்க
யோனி விற்று
இருத்தலியல் மெய்ப்பிக்க
வாழ்ந்திருக்கும் பெண்
யாருக்காக
பெ
ய்
ய்
கி
ற
து
மழை
No comments:
Post a Comment