January 08, 2009


துருவங்களின் இருப்பு


என்
தவறான பாதையில்
சரியான தடங்கள்
நிறைய

தவறும் சரியும்
விரவிக் கிடக்கும்
ஒன்றை யொன்று
உறுத்தாமல்

சரி தவறெனவும்
தவறு சரியெனவும்
மாற்றங்களும் நிகழும்
அவ்வப்போது

சரி தவறைத்
தவறெனவும்
தவறு சரியைத்
தவறெனவும்
சுட்டிக்காட்டலும்
சகஜம்

தவறு சரியை
ஆக்ரமித்தலும்
சரி தவறை
ஆகர்ஸித்தலும்
அதிசயமற்ற நிகழ்வுகள்

சரியும் தவறும் அப்பிய
வழிகளில்
இரண்டு மியல்பாய்க் கலந்தே
கிடக்கும்

No comments:

Post a Comment