January 08, 2009


மரணம் தப்பிய கரணம்


தப்புமா
மரணக்குகைக்குள்
நுழைந்த உயிர்

சதை சிதைத்து
நிணமுறிஞ்சி
என்பு நொறுக்கி
குப்பையாய்ப்
புறந்தள்ளும்

குகைக்குள் நுழைந்து
உயிராய் வெளிவந்து
.................................
தேறுமா தேர்வு

மூச்சடக்கி
தம்பிடித்து
வெட்ட வந்ததை வெட்டி
கொத்த வந்ததை கொத்தி
நசுக்க வந்ததை நசுக்கி
நொறுக்க வந்ததை நொறுக்கி

தப்பிப் பிழைக்கும் வித்தை
உயிராய் வரும் சாகசம்

நமது
நம்மால்
நலம் பெற

No comments:

Post a Comment